Last Updated : 23 Jun, 2016 04:39 PM

 

Published : 23 Jun 2016 04:39 PM
Last Updated : 23 Jun 2016 04:39 PM

71 மணி நேர இடைவிடாப் பயணம்: சூரிய ஒளி ஆற்றல் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது

முழுதும் சூரிய ஒளி ஆற்றல் மூலம் இயக்கப்படும் ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் 71 மணிநேரம் 8 நிமிடங்கள் கொண்ட இடைவிடாப் பயணத்திற்குப் பிறகு ஸ்பெயினில் உள்ள செவில், பாப்லோ விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

கடந்த திங்களன்று நியூயார்க் நகரத்திலிருந்து புறப்பட்ட இந்த பரிசோதனை முயற்சி சோலார் பவர் விமானம் முன் உதாரணம் இல்லாத வகையில் அட்லாண்டிக்கை 3 நாட்கள் கடந்து வந்து ஸ்பெயினை அடைந்தது.

முற்றிலும் எரிபொருள் செலவற்ற இந்த விமானம், அதன் இறக்கைப் பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்கிறது. இரவு நேரங்களில் இந்த சேமித்த சூரிய ஒளி மூலமே இந்த விமானம் பறக்கிறது.

கடந்த 2015 மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானம் உலகம் சுற்றும் சாகசப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

பல்வேறு நகரங்களைக் கடந்து அமெரிக்காவின் பல மாநிலங்கள் வழியாக வந்த இந்த அதிசய விமானம் கடந்த 11-ம் தேதி நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் இறங்கியது.

10 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கடந்த திங்களன்று மீண்டும் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து இடைவிடாப் பயணத்தின் மூலம் ஸ்பெயினில் உள்ள செவில் நகர விமான நிலையத்தை வந்தடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x