Published : 19 Jul 2016 04:45 PM
Last Updated : 19 Jul 2016 04:45 PM
ஜெர்மனி ரயிலில் தாக்குதல் நடத்தியவரின் அறையில் கையால் வரையப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை கண்டறிந்துள்ளதாக பவேரியா மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஜெர்மனியில் நேற்று (திங்கட்கிழமை) வெர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் 17 வயதுடைய மர்ம நபர் ஒருவர் கோடாரியால் பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மர்ம நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜெர்மனி அரசு தொலைக்காட்சியில் பேட்டியளித்த பவேரியா நகரத்தின் உள்துறை அமைச்சர் ஜோக்கிம் ஹெர்மன் கூறியதாவது:
தாக்குதலை நடத்தியவர் ஆப்கானை சேர்ந்தவர். இந்தத் தாக்குதலை அவர் நடத்தியதற்கான காரணங்கள் பற்றிய ஊகங்களை முன்னதாகவே ஊகிப்பது கடினம்.
தாக்குதல் நடத்தியவரின் அறையில் ஐ.எஸ் அமைப்பின் கொடி கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர் ஐ.எஸ் அமைப்பில் தொடர்புடையவரா அல்லது தானாக முன் வந்து இத்தாக்குதலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும் தாக்குதலில் பதிக்கப்பட்ட இருவரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT