Last Updated : 08 Jun, 2017 04:42 PM

 

Published : 08 Jun 2017 04:42 PM
Last Updated : 08 Jun 2017 04:42 PM

சோமாலிய நகரத்தைக் கைப்பற்றிய தீவிரவாதிகள்; தாக்குதலில் 61 வீரர்கள் பலி

சோமாலியாவின் புந்துலாந்து பகுதியை அல்- ஷபாப் தீவிரவாதிகள் வியாழக்கிழமை அன்று கைப்பற்றினர். அப்போது நடந்த தாக்குதலில் 61 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய பாரி பிராந்திய ஆளுநர் யூசுஃப் மொகமது, ''வியாழக்கிழமை காலை உரூர் பகுதியை அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்கினர். அங்கே குறைந்த அளவிலான வீரர்களே இருந்ததால், எளிதாக நகரத்தைக் கைப்பற்றினர்.

தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அறிவது சிரமமாக இருக்கிறது'' என்றார்.

அல் கொய்தாவுடன் இணைப்புடைய தீவிரவாதக் குழு, தாக்குதலில் 61 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அல்- ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''தாக்குதல் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வீரர்களிடம் இருந்து ஆயுதங்களும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

ஆப்பிரிக்கா ஒன்றிய அமைதி காப்பாளர்களை வெளியேற்றி, இஸ்லாம் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றச் செய்யும் நோக்கத்திலேயே அல் ஷபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x