Published : 05 Jun 2017 08:12 AM
Last Updated : 05 Jun 2017 08:12 AM
ரஷ்யாவில் உள்ள ஒரு விடுதியில் குடிபோதையில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாயினர். பின்னர் அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் வெளியிட்ட அறிக்கையில், “தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்கினோ கிராமத்தில் பொழுதுபோக்கு விடுதி உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு ஒரு குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் அங்கிருந்து வெளி யேறிய ஒருவர், மீண்டும் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்த வர்களைச் சுட்டுள்ளார். இதில் 5 ஆண்கள் 3 பெண்கள் பலியாயினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT