Published : 02 Mar 2017 10:13 AM
Last Updated : 02 Mar 2017 10:13 AM
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 12,716 பேருக்கு ‘பேன்கேக்’குகள் வழங்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக் கின்றனர். ‘சாம்பல் புதன்’ தினத் தன்று அவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இங்கிலாந்து, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள், சாம்பல் புதன் தினம் தொடங்கு வதற்கு முந்தைய செவ்வாய்க் கிழமையை, ‘பேன்கேக் தினம்’ அல்லது பேன்கேக் செவ்வாய் தினமாக கொண்டாடுகின்றனர்.
ஆனால், சாம்பல் புதன் கிழமை வருவதற்கு முந்தைய ஒரு வார காலத்தை ரஷ்யர்கள் பேன்கேக் வாரமாக கொண்டாடுகின்றனர். மேலும், குளிர்காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டும் பேன்கேக் வாரத்தை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் சாம்பல் புதன் கிழமையான நேற்று கிறிஸ்தவர் கள் தங்கள் தவக்காலத்தை தொடங்கினர். அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை பேன்கேக் தினத்தை முன்னிட்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 16 பிரபல சமையல் கலைஞர்கள் பேன்கேக்குகளை ஏராளமாகத் தயாரித்தனர். இதற்காக மாஸ்கோ வில் உள்ள பொதுமக்கள் கலையரங்குக்கு வெளியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.
பேன்கேக் தயாரிப்பதற்கான பொருட்களை எல்லாம் தயார் செய்து முன்கூட்டியே வைத்தனர். அதன்பிறகு கின்னஸ் நிறுவனத்தின் நடுவர்கள் லூசியா சினிகாகிலிசி, கிளன் பொல்லார்ட் ஆகியோர் முன்னிலையில் 16 சமையல் கலைஞர்களும் ஆயிரக்கணக்கான பேன்கேக்கு கள் தயாரித்தனர். அவற்றை 12,716 பேருக்கு விநியோகம் செய்தனர். உலகிலேயே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோருக்கு பேன்கேக் தயாரித்து வழங்கியதற்காக இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT