Published : 10 Mar 2017 12:09 PM
Last Updated : 10 Mar 2017 12:09 PM
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரத்திலுள்ள உணவு விடுதியில் நடத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பேசல் நகரிலுள்ள உணவு விடுதியில் இரு நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு வந்து துப்பாக்கியால் பலமுறை சுட ஆரம்பித்தனர். இதில் உணவு விடுதியிலிருந்த வாடிக்கையாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட பிறகு, அந்த நபர்கள் ரயில்வே நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களின் உள் நோக்கம் இதுவரை தெரியவில்லை இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது அரிதான ஒன்றாகும். ராணுவத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே வீட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது,
இந்த அனுமதி சில நேரங்களில் உள்நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் 8 மில்லியன் மக்கள் தொகையில் 2 மில்லியன் மக்கள், தங்கள் வீட்டில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT