Published : 12 Oct 2014 01:48 PM
Last Updated : 12 Oct 2014 01:48 PM
இராக்கின் பாக்தாத் நகருக்கு வடக்கே பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பத்திரிகையாளர் உட்பட 13 பேரை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.
திக்ரிக் நகருக்கு கிழக்கே சம்ரா என்ற கிராமத்தில், உள்ளூர் டி.வி. புகைப்படக்காரர் ராடல் அஸ்ஸாவி (37), அவரது சகோதரர் மற்றும் சிவிலியன்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.
3 குழந்தைகளுக்கு தந்தையான ராடல் அஸ்ஸாவியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த செப்படம்பர் 7-ம் தேதி கடத்திச் சென்றனர். பின்னர் அவரது சகோதரரையும் பிடித்துச் சென்றனர். “அஸ்ஸாவி எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் பத்திரிகையாளராக பணியாற்றி வந்ததுதான் தவறு” என்று அவரது உறவினர்கள் கூறினர்.
இதுபோல் திக்ரிக் நகருக்கு வடக்கே மேலும் 9 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முன்தினம் படுகொலை செய்தனர். அஸ்ஸாப் என்ற நகரில் 6 பேரும், பைஜி என்ற இடத்தில் 3 பேரும் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஐ.எஸ். அமைப்பின் எதிரிகளுக்கு உளவுத் தகவல் கூறுவதாக சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT