Published : 26 Apr 2017 10:44 AM
Last Updated : 26 Apr 2017 10:44 AM
அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் ஒரே இரவில் 2 கைதி களுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் ஒரே நாளில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.
ஆர்கன்சஸ் மாகாண அரசு இருப்பு வைத்துள்ள விஷ ஊசி மருந்து இம்மாத இறுதியில் காலாவதி ஆகவுள்ளது. இதனால் மரண தண்டனை கைதிகளுக்கு அடுத்தடுத்து தண்டனையை நிறைவேற்றுவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 1990-களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாக் ஜோன்ஸ் (52), மார்சல் வில்லியம்ஸ் (46) என்ற இரு கைதிகளுக்கு நேற்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆர்கன்சஸ் மாகாண அரசு இதுவரை இல்லாத வகையில் 11 நாட்களில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்ட மிட்டது. ஆனால் 4 பேரின் மேல் முறையீட்டு மனு ஏற்கப்பட்டதால் இதற்கு தடை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் லெடெல் லீ என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இம்மாநிலத்தில் 10 ஆண்டு களுக்குப் பிறகு நிறைவேற்றப் பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும்.
தற்போது இருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு நாளை தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT