Last Updated : 20 Jun, 2017 11:16 AM

 

Published : 20 Jun 2017 11:16 AM
Last Updated : 20 Jun 2017 11:16 AM

வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம்

வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல் நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது.

இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்ம்பியர், "நான் எனது வாழ்நாளில் மிக மோசமான தவறை செய்துவிட்டேன். என்னை எனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்க்க வேண்டுகிறேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வார்ம்பியயரின் மூளை திசுக்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் செயல்படாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து வார்ம்பியர் கடந்த வாரம் வடகொரியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் வார்ம்ப்பியர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வார்ம்பியரின் பெற்றோர் கூறும்போது, "எங்கள் மகனுக்கு நேர்ந்த முடிவு துரதிருஷ்டவசமானது. பரிதாபமானது. வடகொரியாவிடம் கிடைத்த எங்களது மகனை அவர்கள் சித்தரவதை செய்துள்ளனர்" என்று கூறினர்.

வார்ம்பியரின் மரணம் குறித்து மருத்துவர்கள், "அவரது மூளையிலுள்ள நரம்புகள் சேதமடைந்துள்ளன" என்றனர்.

வடகொரியாவின் கொடூரமான ஆட்சி

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில், "பல மோசமான நிகழ்வுகள் நடந்துவிட்டன. வார்ம்பியரை இறுதியாக அவரது பெற்றோர்களிடம் சேர்க்க முடிந்தது. வடகொரியவில் நடப்பது கொடூரமான ஆட்சி" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x