Published : 04 Mar 2014 02:53 PM
Last Updated : 04 Mar 2014 02:53 PM
உக்ரைன் எல்லை அருகே உள்ள பகுதிகளில் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தமது 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களை பாசறைக்குத் திரும்பும்படி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனில் அரசியல் நெருக் கடி நிலைமையை உருவாக்கிட வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தி வருவதை ஏற்று இந்த நடவடிக்கையை புதின் எடுத்தாரா என்பது தெரியவில்லை.
இதற்கு இடையில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வந்து உக்ரைனின் புதிய தலைவர்களை சந்தித்துப் பேச இருக்கிறார்.
தமது படைகள் போருக்கு ஆயத்தமாக இருக்கிறதா என்பதை சோதிக்க ராணுவ பயிற்சிக்கு பிப்ரவரி 26ம் தேதி மாஸ்கோ உத்தரவிட்டது. ராணுவம், கடற்படை, விமானப் படைகள் இதில் பங்கேற்றன. இந்நிலையில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வரும் படைப்பிரிவுகள் பாசறைக்கு திரும்ப வேண்டும் என தலைமை தளபதிக்கு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்காவ் ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தார்.
உக்ரைன் ஆட்சி அதிகாரத்தில் புதிதாக அமர்ந்துள்ளவர்களுக் கும் மாஸ்கோவுக்கும் இடையே யான மோதலுக்கு முக்கிய பிராந்திய மாக கிரிமியா உள்ளது.
கிரிமியாவில் ரஷ்ய பாது காப்புப்படைகளின் தலையீடு ஆரம்பமாவதற்கு முன் இந்த பயிற்சி ஆரம்பித்தது. நாடாளு மன்றத்திலும் புதின் ராணுவ தலையீட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.
ஐநா விவாதம்
இதனிடையே, உக்ரைன் நிலவரம் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. உக்ரைனில் தனது தலையீடு சரியானதுதான் என ரஷ்யா இந்த கூட்டத்தில் தெரிவித்தது.
நாட்டு மக்களையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க ரஷ்ய ராணுவத்தை அனுப்பும்படி பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிர் விக்டர் யானுகோவிச் கேட்டுக்கொண்டார் என ரஷ்யா தெரிவித்தது. ஆனால் உக்ரைன் புதிய ஆட்சிப் பொறுப்பாளர்கள் அதை நிராகரித்தனர்.
நாட்டைவிட்டு தப்பியோடி விட்ட தலைவருக்கு வெளிநாட்டு தலையீடு கோர என்ன அதிகாரம் இருக்கிறது என புதிய ஆட்சியா ளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப் பட்டது.
உக்ரைன் நிலவரம் கொந்தளிப் படைந்துள்ள நிலையில் நான்கு நாளில் 3 வது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தை விவாதித்தது.
ரஷ்யாவின் தலையீடு கோரி அதிபர் புதினுக்கு யானுகோவிச் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை ஐநாவுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கின் முன்வைத்தார்
ஆனால் வெளிநாடுகளி லிருந்து ராணுவ உதவிகோர உக்ரைன் நாடாளுமன்றத்துக் குத்தான் அதிகாரம் உள்ளது, யானுகோவிச்சுக்கு கிடையாது என ஐநாவுக்கான உக்ரைன் தூதர் யூரி செர்ஜயேவ் குறிப் பிட்டார். மனித உரிமை பிரச்சினைகளை முன்வைத்து உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா சாக்குபோக்கு தேடுகிறது உக்ரைனின் தன்னாட்சி பிராந்தி யமான கிரிமியாவுக்கு பிப்ரவரி 24-ம் தேதியிலிருந்து 16000 வீரர் களை ரஷ்யா அனுப்பியுள்ளது என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் சமந்தா பவர் பேசுகையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் லட்சியத்தில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை அமைய வில்லை. இது முழுக்க முழுக்க உக் ரைனின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறிய செயல்.
உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மை யினருக்கு பாதிப்பு இருப்பதாக கருதினால் அதற்கு தீர்வு காண ஐநா பாதுகாப்பு கவுன்சில் இருக் கிறது. ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்காவும் தயாராக இருக்கிறது.
கிரிமியாவின் பிராந்திய பிரதமர் அழைப்பின் பேரில் உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றார்.
சுர்கின் நிராகரித்தார்.
உக்ரைன் சட்ட அங்கீகாரம் பெற்ற தலைவர் யானுகோவிச் தான் இடைக்கால அதிபர் அலெக்சாண்டர் துர்சினாவ் சட்ட அங்கீகாரம் பெற்ற தலைவர் அல்ல என்றார். பிரிட்டிஷ் தூதர் மார்க் லையால் ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஆட்சேபித்தார்.
1968ல் செக்கோஸ்லாவாகியா மீது சோவியத் தலைமையில் நடந்த படையெடுப்பு போன்று உக்ரைனில் ரஷ்யா தலை யிட்டுள்ளது என்றார் ஐநாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜெரார்ட் அராவுத்..
உக்ரைன் விவகாரம் தொடர் பாக ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின்போது நடந்த சந்திப்பில் ஐநா பொதுச்செயலர் பான் கி மூன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவை சந்தித்தார். உக்ரைனில் பதற்றம் தணிய நடவடிக்கை எடுக்க வேண் டியதன் அவசியம் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.
துப்பாக்கியால் சுட்ட ரஷ்ய ஆதரவு படைகள்
இதனிடையே, உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் பெல்பெக் விமான தளத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள ரஷ்ய ஆதரவு படைகள் செவ் வாய்க்கிழமை எச்சரிக்கை செய்யும் வகையில் துப்பாக்கி யால் சுட்டன. ஆயுதம் இன்றி அணி வகுத்து வந்த உக்ரைன் நாட்டவர்களை மேலும் முன்னோக்கி வந்தால் நிலைமை விபரீதமாகி விடும் என எச்சரித்து இந்த துப்பாக்கி வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT