Published : 22 Oct 2014 11:02 AM
Last Updated : 22 Oct 2014 11:02 AM
கடந்த 1969-ம் ஆண்டு வெளியான ‘ஈஸி ரைடர்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக், 13.5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.8.27 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஈஸி ரைடர் படம், இரு பைக் பிரியர்களைப் பற்றிய படமாகும். அப்படத்தில் பீட்டர் பான்டா பயன்படுத்திய பைக் சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. அப்படத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற இரு பைக்குகள் மட்டுமே அப்போது தயாரிக்கப்பட்டன. அதில், இது ஒன்று மட்டுமே தற்போது உள்ளது.
இந்த பைக்கும், படத்தின் இறுதிக் காட்சியில் சேதமடைவது போல் படமாக்கப் பட்டது. அதில் சேதமடைந்த பைக்கை, அப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்த டான் ஹாக்கெர்டி என்பவர் சரி செய்து வைத்தார். அப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் தான் என்பதை, டான் ஹாக்கெர்டியும், அந்த பைக்கில் பயணித்த கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் பான்டாவும் ஒப்புதல் பத்திரம் அளித்துள்ளனர்.
புரபைல்ஸ் அண்டு ஹிஸ்டரி ஏல நிறுவனம் இந்த பைக்கை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.8.27 கோடிக்கு பைக் ஏலத்தில் எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவ ரின் பெயரை ஏல நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்க மறுத்து விட்டது. ஐசன்பெர்க் என்பவர் இந்த பைக்கை வைத்திருந்தார்.
இதனிடையே டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த கார்டன் கிராங்கர் தன்னிடமுள்ள பைக்தான் உண்மையான கேப்டன் அமெரிக்கா பைக் எனத் தெரிவித்துள்ளார். அதற்காக ஹாக்கெர்டியின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழையும் அவர் வைத்துள்ளார். ஆனால், பான்டாவோ எந்த பைக் அசலானது என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT