Published : 09 Jun 2017 02:45 PM
Last Updated : 09 Jun 2017 02:45 PM
பிரிட்டன் தொங்கு நாடாளுமன்றம் உறுதியாகியுள்ள நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தெரசா மே கோவருவாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப் படி கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களையும், தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பிற கட்சிகளான ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 35 இடங்களையும், லிபரல் டிமாகிரேட் 12 இடங்களையும், டிமாகிரேட் யூனியஸ்ட் கட்சி 10 இடங்களையும் பெற்றுள்ளன
650 உறுப்பினர்கள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் பிரதான இரு பெருங்கட்சிகளும் அந்த எண்ணிக்கையை எட்டாததால் தொங்கு நாடாளுமன்றம் உறுதியாகியுள்ளது.ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனது பெருபான்மையை நிரூபிக்க இன்னும் 8 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
பிற கட்சிகளின் ஆதரவை கோருவாரா தெரசா மே?
இந்த நிலையில், அடுத்த அரசு பதவியேற்கும்வரை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் நீடிக்கும் என்பதால் அதன் தலைவர் தெரசா மே இதர டெமாக்ரேட் யூனியனிஸ்ட் பார்ட்டி ஆஃப் நார்தன் அயர்லாந்து கட்சியின் ஆதரவை கோருவாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT