Published : 04 Mar 2017 10:41 AM
Last Updated : 04 Mar 2017 10:41 AM
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பல்மிரா நகரை ரஷ்ய விமானப் படை உதவியுடன் அரசு படையினர் மீட்டுள்ளனர். இதனால் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு படையினரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ரஷ்யாவும் உதவி கள் செய்து வருகின்றது. இந் நிலையில், சிரியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்மிரா நகரை கடந்த 2015-ம் ஆண்டு தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதன்பின் அங்கிருந்து புராதன பொருட்களை கொள்ளை அடித்தனர்.
சிரிய தலைநகர் டமாஸ்கசில் இருந்து 210 கி.மீ. வடகிழக்காக அமைந்துள்ளது பல்மிரா நகர். இது ஹோஸ் மாகாணத்துக்குள் அமைந்துள்ளது.
இந்நகர் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் கட்டியதாக வரலாற்று ஆவணங் கள் கூறுகின்றன. மிகவும் பழமை வாய்ந்த இந்நகரை கலாச்சார மையமாக ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்துள்ளது. இந்நகரில் ஏராளமான பழங்கால சிலைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஐஎஸ் தீவிரவாதிகள் அழித்து விட்டனர். அழகிய நகரமாக இருந்த பல்மிரா, தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்ற பின் சின்னாபின்னமானது.
இந்நிலையில், ரஷ்யாவின் உதவியுடன் பல்மிரா நகரை மீட்க சிரிய அரசு படையினர் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மோதி வந்தனர். கடந்த ஒரு வாரமாக பல்மிராவும் இருதரப்புக்கும் இடையில் தீவிர மோதல் நடைபெற்றது. அதன்பலனாக பல்மிரா நகரை அரசு படையினர் முழுவதுமாக நேற்று மீட்டுள்ளனர். இதற்கு ரஷ்ய ஜெட் விமானங்களில் இருந்து நடத்திய தாக்குதல் மிக முக்கியமாக இருந்துள்ளது.
பல்மிரா நகரம் மீட்கப்பட்டதை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், சிரியாவில் மனித உரிமை கள் கண்காணிப்பு குழுவும் (இங் கிலாந்தைச் சேர்ந்தவர்கள்) பல்மிரா நகர் முழுவதும் அரசுவசம் வந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளது.
மீட்கப்பட்ட பல்மிரா நகரில் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT