Published : 04 Oct 2014 10:13 AM
Last Updated : 04 Oct 2014 10:13 AM
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பணம் வருவது பெருமளவு அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் அரபு நாட்டில் உள்ள இந்தியர்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு கூடுதலாக பணம் அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளனர். இதுவே பணவரத்து அதிகரிக்க முக்கிய காரணம். சமீபத்தில் ரம்ஜான், ஓணம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அரபு நாட்டில் உள்ளவர்கள் கூடுதலாக பணத்தை அனுப்பிவைக்கத் தொடங்கினர்.
அடுத்ததாக பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் வருகின்றன. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் சென்று பணியாற்றி வரும் பலர் தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதனால் பணவரத்து அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு பணப் பரிமாற்ற நிறுவனமான “எக்ஸ்பிரஸ் மணி” அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக வழக்கத்தைவிட அதிகமாக வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. முக்கியமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பணம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெளிநாட்டில் இருந்து அதிக பணம் வரும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT