Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM
மனித உரிமை பிரச்சினைகள் விவகாரத்தில் சர்வதேச நிலையில் பரஸ்பரம் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அதிகரிக்கவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: மனித உரிமைகள் பிரச்சினைக்கு சீனாவும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது
ஆக்கபூர்வ வழிகளில் மனித உரிமைகளை பயன்படுத்தவேண்டும் என்கிற உலக சமுதாயத்தின் லட்சியத்தை கூட்டாக சேர்ந்து மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை மூலமாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாகவும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் சர்வதேச சமுதாயம் மேம்படுத்திடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடந்தபோது அந்நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பான கேள்விக்கு நவம்பர் 18ம் தேதி கொடுத்த விளக்கம் பற்றி சீனா கூறியுள்ள விவரம்:
பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு நிலவரம் நாட்டுக்கு நாடு வெவ்வேறு விதமாக இருப்பதாலும் நாட்டின் தேசிய நிலவரங்கள் மாறுபடுவதாலும் மனித உரிமைகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பு விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் எழும் என்பதே சீனாவின் கருத்து.
எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிர முயற்சி எடுத்து மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கிய
மானது. இதற்கு சர்வதேச சமுதாயம் ஆக்கபூர்வ உதவி அளிக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT