Published : 29 May 2017 01:00 PM
Last Updated : 29 May 2017 01:00 PM
அமெரிக்காவிலுள்ள மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள், "அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் ஞாயிறன்று 36 வயதான வில்லி கோர்ரி காட்போல்ட் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 8 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்பத் தகராறில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும், குற்றத்தை குற்றவாளி ஒப்புக் கொண்டதாகவும் மிசிசிப்பி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோர்ரி காபோல்ட் குழந்தைகள் வீட்டுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக அவரது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தினர் போலீஸ் அதிகாரியை அழைத்துள்ளனர். இதனால் கோபமடைந்த கோர்ரி கோபால்ட் துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்டதாக அவரே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT