Published : 12 Dec 2013 09:48 AM
Last Updated : 12 Dec 2013 09:48 AM

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் மூண்டால் 200 கோடி பேர் கொல்லப்படுவர்

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுதப் போர் மூண்டால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச மருத்துவர்களின் அணுஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்.டபிள்யூ.) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1947-ம் ஆண்டு முதல் இந்தியா வும் பாகிஸ்தானும் 3 முறை கடும் போர்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் மூண்டால் பேரிழப்புகள் ஏற்படும்.

உலக மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்கள்டுகொல்லப்படு வார்கள். அதாவது சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது.

தெற்காசியாவில் அணுகுண்டு கள் வெடித்தால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துவிடும். அருகில் உள்ள சீனாவில் கோதுமை உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படும். இதனால் சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும்.

அணுகுண்டு கதிர்வீச்சால் சுமார் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதன்பின் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தால் மேலும் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.

உலகின் எந்த மூலையாக இருந்தாலும் 100 அணுகுண்டுகள் வெடித்துச் சிதறினால் அதுவே ஒட்டுமொத்த மனிதகுல வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும். உலகம் முழுவதும் பருவநிலை மாறும். வேளாண் உற்பத்தி சரிந்து உலகம் அழிவுப் பாதையை நோக்கி வேக மாகச் செல்லும்.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாக சாகி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதைவிட அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உலக நாடுகளிடம் இப்போது உள்ளன. இதனால் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும். இந்த பேராபத்தை தடுக்க உலகம் முழுவதும் அணுஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ரா ஹெல்பன்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் அணுஆயுத நாடுகள்

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ் தான், வடகொரியா உள்ளிட்ட நாடு களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

அமெரிக்கா-7700, ரஷ்யா-8500, பிரிட்டன்-225, பிரான்ஸ்-300, சீனா-240, இந்தியா-100, பாகிஸ்தான்-90, வடகொரியா-10 என்ற எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுத சோதனையை நடத்தியிருப்ப தாகவும் அந்த நாட்டிடம் சுமார் 200 அணுஆயுதங்கள் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர மேலும் சில நாடுகளிடமும் அணுஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக அணுஆயுத போர் மூளும் அபாயம் இருப்ப தாகவும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் ஐ.பி.பி.என்.டபிள்யூ. இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் மூண்டு 100 அணுகுண்டுகள் வெடித்தால்கூட உலகம் முழுவதும் போராபத்தை சந்திக்கும் என்று ஐ.பி.பி.என்.டபிள்யூ. தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x