Published : 11 Apr 2017 09:20 AM
Last Updated : 11 Apr 2017 09:20 AM
‘அமெரிக்காவுக்கும், தனக்கு முள்ள சிரியா தொடர்பான ராணுவத் தகவல் தொடர்பு துண் டிக்கப்பட்டுவிட்டது’என்று ரஷ்யா தெளிவாகவே அறிவித்துவிட்டது. சிரியாவின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி யதைத் தொடர்ந்து ரஷ்யா இந்த முடிவை எடுத்திருக்கிறது.
ஒரு காலத்தில் நேரடியான பெரும் பகைவர்களாக இருந்த அமெரிக்க-ரஷ்ய ராணுவங்கள் சிரியாவைக் களமாக்கிக் கொண்டு மீண்டும் ஒரு நேரடி மோதலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
‘அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார். அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடனான எனது தொடர்புகள் சீரடையும் என்று நம்பவில்லை’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், அமெரிக்கா வுக்குமிடையே, சிரியா தொடர்பாக, ‘குறுக்கிடாத வழித்தடங்கள்’ (Deconfliction channels) என்ற ஒரு நடைமுறை 2015-ல் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, வட கிழக்கு சிரியா பகுதியில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விமான ஓட்டிகள் தங்கள் விமானங்களை ஒன்றின் மீது மோதக் கூடாது. கணிசமான இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது. சிரியாவில் இரு வல்லரசுகளும் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல்கள் தங்களுக்கிடையே நேரடி மோதலாக உருவாகி விடக் கூடாது என்பதே இந்த ஏற்பாட்டிற்கு முக்கியக் காரணம்.
இதற்காக ஹாட்லைன் வசதி ஒன்றும் இரு நாடுகளுக்கிடையே உருவானது. இதைத்தான் இப் போது ரஷ்ய அதிபர் துண்டித்திருக் கிறார். ஆக இனி ரஷ்ய விமானங் களும் அமெரிக்க விமானங்களும் சிரியாவின் ஆகாயப் பரப்பில் மிக நெருங்கி வரவும், இதனால் விபத்துகள்(!) உண்டாகவும் வாய்ப்பு உண்டு.
சிரியாவின் எல்லையில் உள்ள குர்து இனத்தவரைக் குறிவைத்து ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தி யது. அதே சமயம் ‘முக்கால்வாசி மக்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர் களாக இருக்கும் ஒரு தேசத்தை ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார்’ என்பதை ஐ.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. இன்று சிரியாவின் கணிசமான பகுதி அதன் பிடியில்.
ஐ.எஸ். அமைப்பினரை அழிப்ப தாகக் கூறி சிரியா அரசே பலவித தாக்குதல்களை நடத்த அது பொது மக்களைத்தான் அதிகம் பாதித்தது. அரசின் தாக்குதல்களால் வெறுத்துப் போன பொதுமக்களில் பலரும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிரியா - ஐ.எஸ். போர் என்பது உண்மையில் பலவித மறைமுகப் போர்களின் திரைபோலவே காட்சி யளிக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் இதன்மூலம் தங்கள் பலத்தை சோதனை செய்து கொள் கின்றன.
அமெரிக்கா எதற்காக சிரியா வின் உள்நாட்டுப் போரில் தலை யிட வேண்டும்? ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் தன் ஆட்சியை நிறுவி னால் அது அமெரிக்க நலனுக்கு எதிரான செயல்களில் நிச்சயம் ஈடுபடும்.
தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு. அமெரிக்காவின் இலக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கூடாரங்கள். ஆனால் சுற்றுப்புறத் தில் இருக்கும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரு வருடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத் தில் இறந்திருக்கிறார்கள். மீதமுள்ள வர்களில் பலரும் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.
சிரியாவின் நட்பு நாடாக விளங்கு கிறது ரஷ்யா. உள்ளூர் கலவர வாதிகளையும் ஐ.எஸ். அமைப் பினரையும் ஒடுக்க ரஷ்ய ராணு வத்தின் உதவியை சிரியா நாடியது. இதைத் தொடர்ந்து கலவரக் காரர்கள் மீது ரஷ்யாவும் வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆக இரு வேறு நோக்கங் களுக்காக அமெரிக்க, ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவின் மண்ணில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவின் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதல் சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கூறும் ரஷ்யா இதனால் உலகளவில் ஏற்படக்கூடிய அதிர்வுகள் மிக மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன், ரஷ்யாவுடனான ‘ஹாட் லைனை’ மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT