Published : 05 Jun 2017 03:55 PM
Last Updated : 05 Jun 2017 03:55 PM
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஐநாவுக்கான இந்திய-அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை நிக்கி ஹாலே சாடியுள்ளார், எப்படி விலகும் முடிவை எடுத்த ட்ரம்ப் இந்தியாவையும் சீனாவையும் தாக்கிப் பேசினாரோ அதே போல் நிக்கி ஹாலே அமெரிக்காவுக்கு அறிவுரை வழங்க வேண்டாம் என்ற தொனியில் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிப்பிடாமலேயே இந்தியப் பிரதமர் மோடி கூறிய போது, “பாரீஸோ பாரீஸ் இல்லையோ, எதிர்காலச் சந்ததினியருக்காக பருவநிலையைப் பாதுகாப்பது நம் கடமை” என்றார்.
இந்நிலையில் ட்ரம்பின் ஐநா தூதர் இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹாலே கூறும்போது, “எங்கள் சுற்றுப்புறச் சூழலை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மற்ற நாடுகள் கூறிவருகின்றன. ஆனால் அமெரிக்கா என்ன செய்ய வேண்டும், எங்கள் நாட்டுக்கு எது உகந்தது என்பதை நாங்களே தீர்மானிக்க வேண்டும் என்றே அமெரிக்காவில் இருக்கும் யாரைக் கேட்டாலும் கூறுவார்கள்.
எனவே இந்தியா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கத் தேவையில்லை.
அந்த நாடுகளுக்கு பாரீஸ் ஒப்பந்தம் சரிப்பட்டு வந்தால் அவர்கள் அதன்படி நடக்கட்டும்.
சுற்றுச்சூழலில் சில விவகாரங்கள் இருக்கிறது என்பதை அறிவோம். அது குறித்து தன்னுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால் அஞ்செலா மெர்கில் ஆப்பிரிக்காவைப் பற்றி கவலைப்படுவதை நாங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்க அவசியமில்லை. அமெரிக்க இறையாண்மை முக்கியம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT