Published : 03 Apr 2017 04:18 PM
Last Updated : 03 Apr 2017 04:18 PM
ஆஸ்திரேலியாவில் சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் தவித்துக் கொண்டிருந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸார் மீட்ட சுவராசியமான நிகழ்வு நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 வயதான நபர் தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பன் கடற்கரையில் படகில் துடுப்பு போட்டு சென்றிருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது படகை சுறா ஒன்று தாக்கியுள்ளது. அவரின் படகின் பின்பகுதியை தாக்கிய சுறா அவரை கடலில் தள்ளி விட்டுச் சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் தனது தொலைபேசியின் மூலம் போலீஸாரின் உதவியை நாடி இருக்கிறார்.
இதுகுறித்து பிரிஸ்பன் போலீஸார் தரப்பில் கூறும்போது, எங்களுக்கு வந்த அவரச தொலைபேசியின் அலைவரிசையைக் கொண்டு கடலில் மாட்டிக் கொண்ட நபரின் இருப்பிடம் கண்டறிந்து விமானத்தின் மூலம் அவரை ஞாயிறு மதியம் மீட்டோம். அவரது பாதிக்கப்பட்ட 6.5 மீட்டர் நீளமுள்ள படகும் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட நபருக்கு அதிர்ஷ்டம் இருந்த காரணத்தால் அவர் விரைவாக மீட்கப்பட்டார், அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கடலுக்குச் செல்லும்போது உயிர்காக்கும் ஜாக்கெட்களை அணிந்து கொள்ளுமாறு போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
கடலிலிருந்து மீட்கப்பட்ட நபர் கூறும்போது, ''தண்ணீருக்கு வெளியே இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT