Published : 27 Feb 2014 11:09 AM
Last Updated : 27 Feb 2014 11:09 AM

இந்திய நிறுவனத்துக்கு ரூ.96 கோடி அபராதம்: அமெரிக்க சுகாதார திட்டத்தில் முறைகேடு புகார்

அமெரிக்காவில் சுகாதார திட்டத்தின் கீழ், செய்யாத பரிசோதனைக்கு போலியாக பில் கொடுத்து முறைகேடு செய்த இந்திய மருத்துவ பரிசோதனை (டயக்னோஸ்டிக்) நிறுவனத்துக்கு ரூ.96 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க மத்திய அரசுக்கு ரூ.85 கோடியையும் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாண அரசுகளுக்கு ரூ.11 கோடி யையும் செலுத்த டயக்னோஸ்டிக் இமேஜிங் குழுமம் (டிஐஜி) ஒப்புக் கொண்டுள்ளது.

தவறான உரிமை கோரிக்கை சட்டத்தின் (பால்ஸ் கிளெய்ம்) கீழ் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் டிஐஜி நிறுவனம் மீது சமூக ஆர்வலர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் செய்யாத பரிசோதனைக்கு பில் கொடுத்து முறைகேடு செய்த தாக டிஐஜி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மொத்தம் ரூ.96 கோடி அபராதம் விதித்து உத்தர விட்டது. இதன்படி, அபராதத் தொகையிலிருந்து வழக்கு தொடுத்தவர்களுக்கு ரூ.17 கோடி வழங்கப்படும். மும்பையைச் சேர்ந்த லீனா தோஷி மருத்துவ படிப்புக்காக (ரோடியாலஜி) கடந்த 1973-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். இவர் தனது கணவர் நிதின் ஜோஷியுடன் இணைந்து கடந்த 1985-ல் டயக் னோஸ்டிக் இமேஜிங் குழுமத்தை நிறுவினார்.

மருத்துவ பரிசோதனை சேவையில் ஈடுபட்டு வரும் இக்குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், கடந்த 1999 முதல் 2010 வரையிலான காலத்தில் அல்ட்ரா சவுண்ட்ஸ், டாப்ளர் ஸ்கேன்ஸ், பெல்விக் எக்ஸ்-ரேஸ் உள்பட பல சோதனைகளை செய்ததாக தவறான பில்களை கொடுத்துள்ளன.

நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் குறைவான வருமானம் உள்ளவர்களுக்காக சமூக சுகாதார பாதுகாப்பு திட்டம் (மெடிகெய்டு) செயல்படுத்தப் படுகிறது. இதன்படி, மருத்துவ செலவை அதற்குரிய பில்லை சமர்ப்பித்த அரசிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியான பில்கள் ஐஎம்ஜி குழுமத்தால் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதவிர அமெரிக்க மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டத்தின் (மெடிகேர்) கீழும் இந்த நிறுவனம் முறைகேடு செய்துள்ளது. இந்த தம்பதி மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. இவர்களின் சேவையைப் பாராட்டி எல்லிஸ் ஐலேண்ட் மெடல் வழங்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x