Published : 16 Oct 2014 09:53 AM
Last Updated : 16 Oct 2014 09:53 AM
உலகின் 9-வது உயரமான கட்டிடத்தை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைக்க கிராண்ட் கேனால் லேண்ட் பப்ளிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
125 மாடிகளும், 2,018 அடி உயரமும் கொண்ட இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை வரும் 2019-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் சொகுசு ஓட்டல், அலுவலகங்கள், வணிக வளாகங் கள் உள்ளிட்டவை செயல்படும். இக்கட்டிடத்தை கட்ட 300 கோடி அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT