Published : 10 Jan 2014 09:40 AM
Last Updated : 10 Jan 2014 09:40 AM
இந்தியாவுக்கு அளித்து வரும் நிதியுதவியை ரத்து செய்யும் பிரிட்டன் அரசின் முடிவை அந் நாட்டு எம்.பி.க்கள் விமர்சித்து உள்ளனர்.
இந்நடவடிக்கை முறையானதாகவும் இல்லை; வெளிப் படைத்தன்மை கொண்டதாகவும் இல்லை என்று எம்.பி.க்கள் குறைகூறியுள்ளனர்.
பிற நாடுகளுக்கு அளித்து வரும் நிதியுதவி தொடர்பான பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டுத் துறைக்கான அமைச்சர் ஜஸ்டின் கிரீனிங், 2015-ம் ஆண்டுடன் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக் காவுக்கும் அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற கீழவையின் உறுப்பினர்கள் அடங்கிய சர்வதேச மேம்பாட்டுக் குழு கூறியிருப்பதாவது: சர்வதேச மேம்பாட்டுத் துறையின் இந்த முடிவு முறைப்படி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதில் வெளிப் படைத்தன்மையும் இல்லை. இருதரப்பு உதவி தொடர்பான மறுஆய்வு, விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “இந்தியாவுக்கும் தென்னாப் பிரிக்காவுக்கும் நிதியுதவி அளிப்பதை நிறுத்தும் முடிவு சரியானதுதான்.
இரு நாடுகளும் (வளர்ச்சியின் பாதையில்) மாற்றமடைந்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டே பிரிட்டன் அரசின் நிதியுதவி தொடர்பான ஆய்வு அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு உதவுவதே எங்களின் குறிக்கோள்” என்றார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு நிதியுதவியை பிரிட்டன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT