Published : 05 Jun 2017 08:53 PM
Last Updated : 05 Jun 2017 08:53 PM
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோ நகரில் உள்ள தொழிற்பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் பலர் மீது குண்டுகள் பாய்ந்து பலியானதாக ஆரஞ்சு கவுண்டி ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் அங்கு பயங்கர பீதி பரவியுள்ளது. ஊழியர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம்பிடிக்கத் தொடங்கியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலையில் அதிருப்தி அடைந்த ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தன்னையே சுட்டுக் கொண்டு பலியானதாகவும் மேலும் 4 பேர் பலியானதாகவும் ஷெரீப் அலுவலகம் தெரிவிக்கிறது.
ஜூ 12, 2016-ல் பல்ஸ் இரவு விடுதியில் ஆர்லாண்டோவில் இதே போன்று துப்பாக்கிச் சூடு நடந்ததில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தற்போது திங்களன்று இந்தச் சம்பவம் அங்கு கடும் பீதியை மக்களிடையே கிளப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT