Last Updated : 12 Oct, 2014 01:56 PM

 

Published : 12 Oct 2014 01:56 PM
Last Updated : 12 Oct 2014 01:56 PM

விமானப் பயணத்தில் எபோலா - அமெரிக்காவில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்கள்

விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது ஒரு பயணி தனக்கு 'எபோலா' நோய் இருப்பதாக 'ஜோக்' அடித்ததாலும், இன்னொரு விமானத்தில் பயணி ஒருவர் வாந்தி எடுத்ததாலும் அமெரிக்காவில் 'எபோலா' அச்சம் முன்பை விட அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை பிலடெல்பியாவில் இருந்து டொமினிக்கன் குடியரசுக்குப் பறந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தனக்கு 'எபோலா' நோய்த் தாக்குதல் இருப்பதாகக் கூறினார். இதனால் விமானம் தரையிறங்கியவுடன் ஆபத்துக் காலங்களில் உதவிக்கு வரும் படை அந்த விமானத்துக்குள் நுழைந்தது. அதன் பிறகே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தான் ஜோக் அடித்ததாக அந்தப் பயணி கூறினார்.

இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ காட்சி யூடியூப்பில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் காணப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வேறொரு சம்பவத்தில், நியூயார்க்கில் இருந்து லாஸ் வேகாஸுக்குப் பறந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் வாந்தி எடுத்தார். விமானம் தரையிறங்கியவுடன், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவருக்கு எபோலா தாக்குதல் இல்லை என்று தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த புதன்கிழமை எபோலா நோய் தாக்கி அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இந்த இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் முன்பை விட எபோலா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x