Published : 28 Aug 2016 11:00 AM
Last Updated : 28 Aug 2016 11:00 AM
மாஸ்கோவில் உள்ள அச்சகக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில், 16 பேர் பலியாகினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் உள்ளூர் அச்சக நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. கிடங்கின் ஒரு பகுதி, நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கிடங்கின் ஓர் அறை முற்றிலும் தீக்கிரையானது. அங்கிருந்து, 16 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
பலியான 16 பேரும் முன்னாள் சோவியத் குடியரசில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என, காவல்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, குற்றவியல் விசார ணைக்கு மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT