Published : 31 Jan 2014 11:16 AM
Last Updated : 31 Jan 2014 11:16 AM

போராட்டத்தை கைவிடப் போவதில்லை: உக்ரைன் எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பொது மன்னிப்பு மசோதா நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டுள்ளவர் களை விடுவிப்பதற்கு வகை செய்யும் பொதுமன்னிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவில் உள்ள நிபந்தனைகளை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. அதாவது அரசு அலுவலகங்களை விட்டு வெளியேறினால் மட்டுமே மன்னிப்பு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த உக்ரைனில் அரசுக்கு எதிராக கடந்த 2 மாதங் களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதித்துறை அமைச்சக அலுவலகம், அதிரடிப்படை போலீஸார் தங்கியிருந்த கட்டி டங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிமித்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு பிரதமர் மிகோலா அசாரோ வின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அதிபர் விக்டர் யானு கோவிச் அறிவித்தார். ஆனால் அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அதிபர் யானுகோவிச்சை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கையின் தலைவர் கேத்ரின் ஆஷ்டன் கூறுகையில், "வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.

உக்ரைனில் புதிய அரசு அமைந்த பின்னரே அந்த நாட்டுக்கு 1,500 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார்.

ஒருவேளை தங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட அரசு உக்ரைனில் அமைந்தால் நிதியுதவி வழங்கும் திட்டத்திலிருந்து ரஷிய அரசு பின்வாங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

கீவ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு 3 பேர் இறந்தனர். அதன்பிறகு அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடை பெற்றதையடுத்து இப்போது சற்று அமைதி நிலவுகிறது. எனினும், அவ்வளவு எளிதாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பில்லை. 4.6 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உக்ரைன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஐரோப்பிய யூனியனுக்கும் ரஷியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவு கிறது.

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உடன் ரஷிய அதிபர் புதின் விவாதித்ததாக கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x