Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

31 ஆண்டுகளுக்குப் பிறகு பேஸ்புக் மூலம் இணைந்த குடும்பம்

கவுதமாலாவில் உள்நாட்டுப் போர் காரணமாக,31 ஆண்டுகளாக பிரிந்திருந்த குடும்பத்தை மீண்டும் இணைத்து வைத்துள்ளது ஃபேஸ்புக்.

சகோதர சகோதரிகளான ஒபேலியா, அவிலியோ மற்றும் எல்சிரா பியூனெஸ் வேலஸ்குவெஸ் ஆகிய மூவரும் சிறிய வயதில் லா டெமோகிரேசியாவில் வசித்து வந்தனர். 1960 முதல் 1996 வரையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இவர்களது பெற்றோர் இறந்தனர். எல்சிராவை ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துச் சென்றது.

இந்நிலையில், இவர்களது குடும்பத்திலிருந்து காணாமல் போன மற்றொரு நபரான கிரிசெரியோ பரஸ்பர உதவிக் குழுவின் ஒத்துழைப்புடன் தனது சகோதரர் அவிலியோவுடன் மீண்டும் இணைந்தார். இது தொடர்பான புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தனர். இதைவைத்து தங்களது சகோதரருடன் மீண்டும் இணைந்தார் எல்சிரா. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 7 சகோதர சகோதரிகள். இதில் 4 பேர் இணைந்து விட்டனர். விக்டர், எஸ்டிலா மற்றும் ராபெர்டா ஆகிய மூவரும் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x