Last Updated : 01 Jun, 2016 10:58 AM

 

Published : 01 Jun 2016 10:58 AM
Last Updated : 01 Jun 2016 10:58 AM

சிரியாவில் ரஷிய தாக்குதலில் 23 பொதுமக்கள் பலி

சிரியாவில் அல்-காய்தா வசமிருக் கும் இத்லிப் நகர் மீது ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி மக்கள் 23 பேர் உயி ரிழந்ததாக போர் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.

வடமேற்கு சிரியாவின் இத்லிப் மாகாண தலைநகராக இத்லிப் நகரம் விளங்குகிறது. இந்த நகரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், அல்-காய்தாவின் துணை அமைப்பான அல்-நஸ்ரா ஃபிரண்ட் மற்றும் அதன் கூட்ட ணிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இத்லிப் நகர் மீது ரஷிய போர் விமானங்கள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின.

சிரியாவில் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷியா தாக்குதலை தொடங்கியது. ரஷிய ஆதரவு அரசுப் படைக்கும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் அல்-நஸ்ரா அங்கம் வகிக்க வில் லை. என்றாலும் அதன் கட்டுப் பாட்டில் உள்ள இத்லிப் நகர் மீது குறைவான தாக்குதலே நடத்தப்பட்டு வந்தது. இதனால் ஒப்பீட்டளவில் அமைதியான நகராக இத்லிப் விளங்கியது.

இந்நிலையில் உடன்பாடு அம லுக்கு வந்தபின் முதல்முறையாக இத்லிப் நகர் மீது ரஷியா நேற்று கடும் தாக்குதலை நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள் ளது. மருத்துவமனை மற்றும் பொதுப்பூங்கா அருகில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 23 பேர் இறந்ததாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

கடந்த 2011-ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் 2 லட்சத்து 80 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x