Published : 21 Jun 2017 02:04 PM
Last Updated : 21 Jun 2017 02:04 PM
சவுதியின் புதிய இளவரசராக ஈரான் எதிர்ப்புக் கொள்கை கொண்ட முகமது பின் சல்மான் அரசக் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுதியின் புதிய இளவரசராக (இன்று) புதன்கிழமை நியமிக்கப்பட்ட 31 வயதான முகமது பின் சல்மான் தீவிரமான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை கொண்டவர். மேலும் அமெரிக்காவுடனான சவுதியின் நட்புறவுக்கு அடையாளமாகவும் அறியப்படுகிறார்.
சவுதியின் மன்னர் அப்துல்லா உடல் நலக்குறைவால் 2015-ம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து சல்மான் சவுதியின் அரசராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் சல்மான் பதவி ஏற்று சில மாதங்களிலே தனது அடுத்த வாரிசான முகமது பீன் நயீப்பை சவுதியின் புதிய இளவரசராக அறிவித்தார். இது சவுதியின் குடும்ப அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சவுதியின் இளவரசராக இருந்த சயீப் நீக்கப்பட்டு முகமது பின் சல்மானை சவுதியின் இளவரசராக அரசர் சல்மான் அறிவித்துள்ளார்.
இது குறித்து சவுதியின் அரசு செய்தி ஊடகங்கள், " சவுதியின் இளவர்சர் முகமது பீன் நயீப் தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சராக இருந்த முகமது பின் சல்மான் இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இம்முடிவுக்கு சவுதியின் அரசு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இளவரசராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக முகமத் பின் சல்மான் பதவி வகித்து வந்தார்.
ஈரானை கடுமையாக எதிர்ப்பவர்
சவுதியின் இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ஈரான் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்.
தொலைக்காட்சிகளில் ஈரான் தீவிரவாதக் கொள்கை கொண்ட நாடு. இஸ்லாம் உலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ஈரான் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெளிப்படையாக முகமது பின் சல்மான் விமர்சித்தார்.
இந்த நிலையில் சவுதியின் புதிய அரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பிராந்தியத்தில் எந்த நாடு தலைமைத்துவம் பெற வேண்டுமென்பதில் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையேயான மோதல்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT