Published : 25 Oct 2014 01:19 PM
Last Updated : 25 Oct 2014 01:19 PM

எனது பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்: ஸ்டீஃபன் ஹாக்கிங்

பிரிட்டன் நாட்டு விஞ்ஞானியும் கணித நிபுணருமான ஸ்டீஃபன் ஹாக்கிங் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தமது பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள் என்று கூறி உள்ளார்.

அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தன்னை ஃபேஸ்புக்கில் இணைத்துக்கொண்ட ஸ்டீஃபன் ஹாக்கிங் அவரது ஆதரவாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நேற்று(வெள்ளிக்கிழமை) பகிர்ந்துகொண்ட ஃபேஸ்புக் நிலை குறிப்பில், "இந்த உலகத்தை எது வாழ செய்கிறது என்பதை எண்ணி எப்போதும் நான் வியப்பதுண்டு. நேரமும் விண்வெளியும் மிகவும் புதிரானது. அவை நாம் சிந்திப்பதை நிறுத்திவிடாது.

அவ்வாறான சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு என்னை வியக்க செய்கிறது. உங்களுடன் எனது பயணத்தை அவ்வப்போது பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். எனது பக்கத்தை பார்த்தமைக்கு நன்றி" என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிட்டுள்ளார்.

இயற்பியலாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், பிரிட்டனைச் சேர்ந்தவர். பல கணித கோட்பாடுகளையும் அண்டவியல் குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளார். தனது 21 வயதில் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis) என்ற குணப்படுத்தப்பட முடியாத நோய் தாக்கி அவரது கை, கால் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தார். இந்த நிலைமையிலும் அவர் தனது நிபுணத்துவத்தை கைவிடாது கணினி மூலமாக மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்.

தற்போது அவர் அனைத்து தரப்பு மக்களும் இணைய கூடிய தளமான ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளது அவரை பின்பற்றுபவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுவரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 1,102,183 விருப்பங்களை ஸ்டீஃபன் ஹாக்கிங் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x