Last Updated : 04 May, 2017 02:29 PM

 

Published : 04 May 2017 02:29 PM
Last Updated : 04 May 2017 02:29 PM

பொறுமையை சோதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அணுஆயுத ஏவுகணை தொடர்பாக வடகொரியாவின் பொறுமையை சோதித்தால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பங்கேற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும். வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும். சீனா வடகொரியாவுடன் நாட்டுடன் வைத்துள்ள உறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மோதல்

வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவி வந்தது. அமெரிக்காவும் இவ்விவகாரத்தில் சீனா வடகொரியாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுடன் அணுஆயுத ஏவுகணை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வடகொரியா சீனாவை எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x