Published : 08 May 2017 02:09 PM
Last Updated : 08 May 2017 02:09 PM
சீனாவின் மத்தியப் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 18 பேர் பலியாகினர். 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், "சீனாவின் மத்திய பகுதியான ஹுனான் மாகாணத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை விஷவாயு கசிந்ததில் அங்கு பணி செய்து கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பலியாகினர். 37 பேர் மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன். தேவையான பாதுகாப்பு அம்சங்களை நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்காததால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT