Published : 22 Feb 2014 12:04 PM
Last Updated : 22 Feb 2014 12:04 PM
வெனிசூலாவில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, போராட்டம் நடை பெறும் பகுதிகளுக்கு ராணுவத்தின் பாராசூட் படைப் பிரிவை அதிபர் நிகோலஸ் மதுரோ அனுப்பி வைத்துள்ளார்.
வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் மாணவர்களும் குதித்துள்ளனர். தினமும் நடைபெறும் போராட் டங்களில் சில வன்முறையாக உருவெடுக்கின்றன.
இதுவரை 4 பேர் உயிரிழந் துள்ளனர். ஏராளமானவர்கள் காயமுற்றுள்ளனர். இந்நிலையில், போராட்டங்கள் அதிக அளவு நடைபெறும் பகுதிகளுக்கு துணை ராணுவப் படையை அதிபர் நிகோலஸ் மதுரோ அனுப்பி வைத்துள்ளார். சான் கிரிஸ்டோபல் நகரத்தில் கடந்த 4-ம் தேதி முதல் போராட்டம் வெடித்தது. அப்பகுதிக்கு ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் பாதுகாப்புப் படை யினருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
தலைநகர் காரகாஸ் மற்றும் இதர பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் கடைகள், வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் ஆங்காங்கு தீ வைத்தும், தடுப்புகளை ஏற்படுத்தியும் உள்ளதால் பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லையைக் கடந்து உட்புக முயற்சி செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போராட்டக் காரர்களை விடுவித்து, உண்மை யான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வெனிசுலா அரசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியிருந்தார்.
ஒபாமாவின் கருத்தைக் கடுமையாக மறுத்துள்ள மதுரோ, “ஒபாமாவின் தலையீடு, நாட்டின் உள்விவகாரங்களில் புதிய கொடூரமான அந்நிய சக்தி தலையிடுவதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தூதர்கள் வெளியேற்றம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூவரை நாட்டிலிருந்து வெளி யேறும்படி அதிபர் மதுரோ உத்தர விட்டார். அவர்கள் மீது, மாணவர் களின் தலைவர்களை விசா வழங் கும் போர்வையில் சந்தித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT