Published : 18 Jan 2014 11:16 AM
Last Updated : 18 Jan 2014 11:16 AM
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர பெண் மேயர் அனீஸ் பார்க்கர் தனது நீண்டநாள் தோழியான கேத்தி ஹப்பார்டை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் தன் பாலின திருமணம் செய்து கொண்ட முதல் மேயரும் அவர்தான்.
கலிபோர்னியாவில் நேற்று இந்த திருமணம் நடைபெற்றது. இதில் இரு தரப்பு குடும்ப உறுப்பினர்களும், நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். ஹூஸ்டன் நகரின் மேயராக தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ள அனீஸ் 2010-ம் ஆண்டில் இருந்து இப்பதவியில் தொடர்கிறார்.
ஹூஸ்டன் நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது. இங்கு தன் பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இத்திருமணம் குறித்து டுவிட்டர் இணையதளத்தில் மேயர் அனீஸ் கூறியிருப்பது: இருபது ஆண்டுகளாக கேத்தியை காதலித்து வந்தேன். ஒரு பெண்ணை மணந்து கொண்டுள்ளதை சிறப்பானதாகவே கருதுகிறேன். இத்திருமணம் எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமான தருணம். இதற்காக நீண்டகாலம் காத்திருந்தேன் என்று கூறியுள் ளார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜோடி ஜனவரி 16-ம் தேதிதான் முதல்முறையாக சந்தித்துக் கொண்டது. இதனால்தான் அதே தேதியில் திருமணம் செய்து கொண்டனர். மேயர் அனீஸுக்கு இப்போது 57 வயதாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT