Published : 18 Apr 2017 02:11 PM
Last Updated : 18 Apr 2017 02:11 PM
ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் காயமடைந்த சிறுமி ஒருவர் பலியானார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "லாடிசியா புரோவர் என்ற 17- வயது சிறுமி ஆஸ்திரேலியாவின் சுற்றுலா பகுதியான மேற்கு கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார்.
கடற்கரையில் சர்ஃப் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்ட லாடிசியா தனது தந்தையுடன் சர்ஃப் செய்து கொண்டிருந்திருக்கிறார். இதனை கடற்கரையின் மணல் பரப்பில் நின்று லாடிசியாவின் தாயாரும், சகோதரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். லாடிசியாவுடன் அவரது தந்தையும் சர்ஃப் செய்து இருக்கிறார்.
அப்போது எதிர்பாரதவிதமாக கடலின் மேற்பரப்பில் வந்த சுறா ஒன்று லாடிசியவை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்து போன லாடிசியாவை நினைவிழந்த நிலையில் கடலோர காவல் படையினர் மீட்டனர். பின்னர் சுறாவின் தாக்குதலில் லாடிசியா மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து லாடிசியாவின் குடும்பத்தினர் கூறும்போது, "லாடிசியாவின் மரணம் அவளது குடும்பத்துக்கு பேரிழப்பு. லாடிசியா அவளுக்கு விருப்பமானதை செய்துக் கொண்டிருக்கும்போதுதான் மரணம் அடைந்துள்ளாள். அவள் கடலை மிகவும் நேசித்தாள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT