Published : 07 Jan 2014 12:43 PM
Last Updated : 07 Jan 2014 12:43 PM
ஆஸ்திரேலியாவில் இனவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட இந்திய மாணவர் மன்ராஜ்விந்தர் சிங் உடல்நலம் தேறி வருகிறார். மெல்போர்னில் தங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர்29-ம் தேதி இரவு நகரை சுற்றிப் பார்க்க சென்றபோது இனவெறிக் கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவரது உடல்நலம் தேறி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். மற்ற 5 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்தியர் கள் மீது நடத்தப்படும் தாக்குதல் களால் அங்கு உயர் படிப்புக்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 71 சத வீதம் வரை இந்திய மாணவர் எண்ணிக்கை சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
‘கில் யுவர் ரைவல்ஸ்' என்ற அமைப்பைச் சேர்ந்தோர் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மன்ராஜ்விந்தர் சிங் மீது தாக்குதல் நடத்தியதும் இக்கும்பல்தான் என்று ஆஸ்திரேலிய போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT