Published : 26 Oct 2014 02:09 PM
Last Updated : 26 Oct 2014 02:09 PM
நிலவின் சுற்றுப்பாதைக்குச் சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்கலத்தை சீனா முதன்முதலாக வெற்றிகரமாக ஏவியுள்ளது.
‘சேஞ்ச் -5’ என்ற விண்வெளித் திட்டத்தைச் சீனா செயல்படுத்த உள்ளது. நிலவுக்குச் சென்று தரையிறங்கிய பின்னர் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தை வடி வமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விண்கலத்தை சீனா நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பி யுள்ளது. இந்த விண்கலம் ‘சேஞ்ச் -5’ திட்டத்தில் பயன்படுத்தப்படவுள் ளதாகும்.
3சி ஏவுகணை மூலம் இந்த விண்கலம், சிச்சுவான் மாகாணத் திலுள்ள ஜிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
‘பரிசோதனை முயற்சியிலான இந்த விண்கலம், நிலவின் சுற்றுப் பாதைக்குச் சென்ற பிறகு, ராக்கெட்டிலிருந்து தனியே பிரிந்துவிடும். பின்னர் 3.80 லட்சம் கி.மீ. உயரத்தில் நிலவின் சுற்றுப்பாதையை ஏறக்குறைய பாதியளவு கடந்த பின் பூமிக்குத் திரும்பும்’ என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT