Published : 23 Oct 2014 09:25 PM
Last Updated : 23 Oct 2014 09:25 PM
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபங்களின் திருவிழாவான தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகியோர், இன்னமும் இருளில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்றாலும் இறுதியில் வெளிச்சம் கிடைக்கும் என்பதை நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இந்த தீபாவளி திருநாள் விளங்குகிறது.
அறியாமையை தோற்கடித்து அறிவு வெற்றி பெறும். அதுபோல் அவநம்பிக்கையை வீழ்த்தி இரக்கம் வெற்றி கொள்ளும். மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்காக அந்த வெற்றியை அடைய வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகவும் இந்த திருநாள் விளங்குகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் முதன்முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடியதை பெருமையாகக் கருதுகிறேன். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை இங்கு கொண்டாடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த விழாவை அங்குள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயில் பூஜாரி முன்னின்று நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT