Published : 17 Jan 2014 12:05 PM
Last Updated : 17 Jan 2014 12:05 PM
நியூஸிலாந்தில் 8 திமிங்கலங்கள் கருணை அடிப்படையில் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்தின் தெற்குத் தீவுப்பகுதியில் அடிக்கடி திமிங் கலங்கள் கரை ஒதுங்குவது வழக் கம். கடல் பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணில்படும்போது அவற்றை மீண்டும் கடலில் விடுவது வழக்கம்.
கடந்த சில நாள்களில் சுமார் 65 திமிங்கலங்கள் வரை கரை ஒதுங்கின. இவற்றை அதிகாரிகள் மீட்டு கடலுக்குள் விட்டனர். ஆனால் அவற்றில் 13 திமிங்கலங்கள் மட்டும் மீண்டும், மீண்டும் கரையை நோக்கியே வந்தன. இதனால் அவை உயிருக்குப் போராடத் தொடங்கின.
அவற்றை கடலுக்குள் திருப்பி விட பலமுறை முயற்சித்தும் பலன் ஏற்படவில்லை. திமிங்கலங்கள் உயிருக்குப் போராடி கஷ்டத்தை அனுபவிப்பதைவிட அவற்றை கருணைக் கொலை செய்து விடலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த சூழ்நிலையில் 5 திமிங்க லங்கள் தானவே இறந்துவிட்டன. மீதமிருந்த 8 திமிங்கலங்கள் கருணை அடிப்படையில் கொலை செய்யப்பட்டன. திமிங்கலங் களைக் காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் அனுப்ப அனைத்து முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் அவற்றால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. எனவே சித்தரவதை அனுபவிப்பதைவிட உயிரிழந்துவிடுவதே சிறந்தது என்று முடிவு எடுக்கப்பட்டது என்று கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த திமிங்கலங்கள் அனைத்துமே பைலட் திமிங்கலம் வகையைச் சேர்ந்தவை. பெரிய அலைகள் இவற்றை கரைக்கு கொண்டு வந்துவிடுகின்றன. முன்னதாக கடந்த மாதம் இதே பகுதியில் 39 திமிங்கலங்கள் தானாவே கரை ஒதுங்கி இறந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT