Published : 28 Mar 2017 01:37 PM
Last Updated : 28 Mar 2017 01:37 PM
இரானை மிரட்டி புதிய வீடியோ ஒன்றை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐஎஸ் இயக்கத்தின் சமூக ஊடகம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
சுமார் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவுக்கு ’த பார்சி லேண்ட்: நேற்று முதல் இன்று வரை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் வெலியிட்ட வீடியோ குறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில்,
"முகமூடி அணிந்த அந்த நபர், இரானின் தலைவர் அயடோலா அலி காமினெவின் பெயரை குறிப்பிட்டு பேசத் தொடங்கினார். இஸ்லாமியப் புரட்சியைக் கட்டுப்படுத்தும் நீங்கள் சபிக்கப்பட்ட நபர். நாங்கள் உறுதியளிக்கிறோம் விரைவில் உங்களது இல்லம் அழிக்கப்படும். இரான் மீண்டும் சன்னி முஸ்லிம்களின் தேசமாக விரைவில் மீட்டெடுக்கப்படும்.
மேலும் வீடியோவில் ஐஎஸ் இயக்கத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் பலர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT