Published : 17 Mar 2014 12:00 PM
Last Updated : 17 Mar 2014 12:00 PM

ரஷியாவுடன் இணைய கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு

உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரஷிய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதி கடந்த ஒரு மாதமாக ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பொது வாக்கெடுப்பு முடிவுகள் ரஷியாவுக்கு சாதமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இம்முடிவுகளை அங்கீகரிக்க முடியாது என உக்ரைனின் புதிய அரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளன.

இந்நிலையில் கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. ரஷியாவுடன் இணைவது அல்லது கூடுதல் சுயாட்சியுடன் உக்ரைனின் ஒரு பகுதியாக நீடிப்பது என வாக்காளர்களுக்கு இரு வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போதைய நிலையே நீடிக்கலாம் என வாய்ப்பு தரப்படவில்லை.

கிரிமியாவின் பக்சிசரே நகரில் 71 வயது வாக்காளர் ஒருவர் கூறுகையில், “எல்லோரும் ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். இந்த தருணத் துக்காக நாங்கள் பல ஆண்டுகள் காத்திருந்தோம்” என்றார். பொது வாக்கெடுப்பு முடிந்த சிலமணி நேரங்களில் தாற்காலிக முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இறுதி முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் ரஷியா வுக்கு ஆதரவாக வாக்களித்தால், கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பணிகள் இந்த வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது. கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா சனிக்கிழமை தீர் மானம் கொண்டுவந்தது. ஆனால் இத்தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தோற்கடித்தது.

உக்ரைன் இடைக்கால அதிபர் தர்கினோவ் சனிக்கிழமை கூறுகை யில், “தற்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. உக்ரைன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்துள்ளது” என்றார்.

இதனிடையே ரஷியாவுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத் துள்ளன. “வாக்கெடுப்பு முடிவு கள் எப்படியிருந்தாலும், கிரிமியாவை விட்டு ரஷியா வெளியேறவேண்டும். இல்லா விட்டால் அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் கடுமை யாக்கப்படும்” என்று எச்சரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x