Last Updated : 27 Sep, 2015 11:35 AM

 

Published : 27 Sep 2015 11:35 AM
Last Updated : 27 Sep 2015 11:35 AM

ஹஜ் யாத்திரை கூட்டநெரிசல் விபத்து: மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது - சவுதி அரேபியா கருத்து

ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மினா நகரில் கடந்த 24-ம் தேதி கூட்ட நெரி சலில் சிக்கி 717 பேர் உயிரிழந் தனர். இதில் 15 இந்தியர்கள் உட்பட 131 நாடுகளைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் பலியாயினர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹஜ் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய சவுதி அரேபிய அரசு தவறி விட்டதாக ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் புனித ஹஜ் யாத்திரை நேற்று நிறைவுப் பெற்றது. இதையொட்டி அந்த நாட்டு உள்துறை அமைச்சரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் நயீப் தலைமையில் மினா நகரில் நேற்று சிறப்பு ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சவுதி அரேபியாவின் மூத்த மத குரு ஷேக் அப்துல் ஆசிஷ் அல்-ஷேக் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளில் நேரிட்ட மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று. ஆனால் இது போன்ற கூட்ட நெரிசல் விபத்துகள் மனிதனால் கட்டுப்படுத்த முடியாதவை. அமைச்சர் முகமது பின் நயீப் உட்பட யாரையும் குற்றம் சொல்ல முடியாது. விதி வலியது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் முகமது பின் நயீப் தெரிவித்தார். இதனி டையே கூட்ட நெரிசல் விபத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டுக் கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யு மாறு மன்னர் சல்மான் உத்தர விட்டுள்ளார்.

பலி 18ஆக உயர்வு

சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 15 இந்தியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் 3 இந்தியர்கள் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x