Published : 06 Oct 2014 11:36 AM
Last Updated : 06 Oct 2014 11:36 AM
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கூட்டத்தின்போது குர்திஷ் படையின் பெண் போராளி ஒருவர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனி நாடு அமைக்கும் எண்ணத்துடன் இராக் மற்றும் சிரியாவில் படையெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இராக் ராணுவமும் அந்நாட்டு குர்திஷ் படையினரும் போராடி அவருகின்றனர். ஐ.எஸ்-ஸுக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்தும் வான்வழித் தாக்குதல்களை மெற்கொண்டும் வருகிறது.
இந்த நிலையில், சிரியாவின் மேற்கில் உள்ள கோபேன் நகரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்பு ஞாயிறு அன்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கிளர்ச்சியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு மனித வெடிகுண்டாக செயல்பட முன் ஏற்பாடு செய்து வந்த குர்திஷ் படையைச் சேர்ந்த பெண் போராளி, திடீரென குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்.
இதனை சினுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து சிரியாவில் போர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஐ.நா. அமைப்பு கூறும்போது, "சிரியாவின் மேற்கில் உள்ள கோபேன் நகரத்தில் வசிக்கும் குர்திஷ் இன மக்கள், ஐ.எஸ்-ஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். அங்கு 350 கிராமங்களை கிளர்ச்சி அமைப்பு தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால் அங்கிருக்கும் மக்கள், குர்திஷ் படையில் இணைந்து வருகின்றனர்" என்றார்.
முன்னதாக இதே கோபேன் நகரத்தில், 19 வயது குர்திஷ் இனப் பெண், ஐ.எஸ். அமைப்பு தன்னை சுற்றிவளைத்ததை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT