Published : 25 Feb 2017 09:52 AM
Last Updated : 25 Feb 2017 09:52 AM
சிரியாவின் வடக்கில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அல்-பாப் என்ற நகரம் உள்ளது. வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி முக்கிய நகரம் இதுவாகும். இந்நகரை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல வார சண்டைக்குப் பிறகு நேற்று முன்தினம் மீட்டனர்.
இந்நிலையில் அல்-பாப் நகருக்கு வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில், சுசியன் என்ற கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று காலை, சாலையில் சோத னைப் பணி மேற்கொண்டிருந்தனர். சோதனைச் சாவடிக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் 2 படைப் பிரிவுகள் முகாமிட்டிருந்தன.
இந்நிலையில் தீவிரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய காரை திடீரென சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் 51 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT