Published : 08 Jun 2017 01:23 PM
Last Updated : 08 Jun 2017 01:23 PM
தீவிரவாதத் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
கடந்த 2015-ம் ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த தெரசா மே தற்போது இங்கிலாந்தின் பிரதமராக உள்ளார். தெரசா மே தலைமையிலான ஆட்சி 2020-ஆம் ஆண்டுதான் முடிவுக்கு வருகிறது.
ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு புதிய தேர்தல் நடைபெறும் என்று தெரசா மே அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு ஜூன் 8-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலின் மூலம் 3,300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
சுமார் 4.6 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) முடிவடைகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில மணி நேரங்களில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதலால் ஆளும் கட்சிக்கு பின்னடைவு
இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் மான்செஸ்டர் இசை அரங்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு மற்றும் லண்டன் பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் முக்கிய செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவில் கன்சர்வேடிவ் கட்சியை விட, தொழிலாளர் கட்சி ஒரு சதவீதம் மட்டுமே பின் தங்கியுள்ளது.
மேலும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின்னுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT