Published : 27 Mar 2017 01:46 PM
Last Updated : 27 Mar 2017 01:46 PM
ஜப்பானில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஜப்பானின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை கூறும்போது, "ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாசு என்ற பகுதியில் 7 உயர்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 9.20 மணியளவில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT