Published : 02 Feb 2017 03:11 PM
Last Updated : 02 Feb 2017 03:11 PM
ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற அச்சம் நிலவி வந்தது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒருமுறை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருந்தார்.
டொனால்ட் ட்ரம்ப் உடனான 25 நிமிட தொலைப்பேசி உரையாடலில் இதை அவர் உறுதிப்படுத்தியதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் அமெரிக்க தரப்பிலிருந்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக எந்த தகவலும் வெளிவரமால் இருந்தது.
இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியே பிரதமர் மால்கம் டர்ன்புல்லுகும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியே பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்கு இடையே நடந்த உரையாடல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ஒபாமா ஆட்சி காலத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அமெரிக்க ஒப்பந்தம் மோசமான ஒப்பந்தம் என்றும், ட்ரம்ப் கோபமாக கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஆஸ்திரேலியாவிடமிருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஆயிரக்கணக்கானவர்களை ஏற்றுக் கொள்ள ஒபாமா நிர்வாகம் ஒப்புக் கொண்டது ஏன்? நான் இந்த வாய்பேசா ஒப்பந்தத்தை படித்து ஆராயவிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடல் வழியே ஆஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT