Last Updated : 04 Aug, 2016 03:55 PM

 

Published : 04 Aug 2016 03:55 PM
Last Updated : 04 Aug 2016 03:55 PM

ஒயின் அரசி- ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி!

சிரியாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் நடைபெற்ற அழகிகளுக்கான போட்டியில் "ஒயின் அரசி" எனும் மகுடம் சூட்டப்பட்டதன் மூலம் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார்.

லக்சம்பர்க் நாட்டின் எல்லையோரம் மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள மாசெலெ ஒயின் பிரதேச நகரம் ட்ரையர். இங்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற அழகி போட்டியில் சிரியாவை சேர்ந்த 26 வயதான நினோர்டா பஹ்னோ என்ற மாணவி ஒயின் குயினாக மகுடம் சூட்டப்பட்டார்.

ஒயின் குயினாக மகுடம் சூடப்பட்டதன் மூலம் ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமை நினோர்டா பஹ்னோவிக்கு கிடைத்துள்ளது.

நினோர்டா பஹ்னோ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு அகதியாக அடைக்கலம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x