Published : 31 Dec 2013 10:15 AM
Last Updated : 31 Dec 2013 10:15 AM

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது வன்முறைக் கும்பல் கொடூர தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் படித்த இந்திய மாணவர் மீது மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி யுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தற்போது கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த மன்ராஜ் விந்தர் சிங் (20), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த ஓராண்டாக மெல்போர்ன் நகரில் தங்கியிருக்கும் அவர் ஒருமுறைகூட இரவில் வெளியே சென்றதில்லை.

தற்போது ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருப்பதால் மன்ராஜ்விந்தர் சிங்கும் அவரது நண்பர்கள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நகரைச் சுற்றிப் பார்க்க வெளியே சென்றனர்.

3 பேரும் பிரின்சஸ் பிரிட்ஜ் என்ற இடத்தின் நடைபாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கி யது. 3 பேரில் ஒருவர் கும்பலில் சிக்காமல் தப்பியோடி விட்டார்.

மற்ற 2 பேரும் கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். இதில் மன்ராஜ்விந்தர் சிங் பலத்த காயமடைந்தார். அவரை கீழே தள்ளி அடித்து, உதைத்த கும்பல் தடியால் தாக்கியது. அவரிடமிருந்து 2 செல்போன்கள், பணத்தைப் பறித்துக் கொண்டு கும்பல் தப்பியோடி விட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மன்ராஜ்விந்தர் சிங்கை மீட்டு அங்குள்ள ஆல் பிரட் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் கோமா நிலையில் உள்ளார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

காயமடைந்த மற்றொரு நண்ப ருக்கு முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் மட்டுமே காயம் ஏற்பட் டுள்ளது. அவர் நலமாக இருப்பதாக தெரிவித்த போலீஸார் மேலும் கூறியதாவது:

தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவா கியுள்ளது. 9 பேர் கும்பல் தாக்கு தலை நடத்தியுள்ளனர். 8 பேர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளையினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவர்களோடு இருந் துள்ளார். வழிப்பறிக்காக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கோழைத்தனமாது. சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கி யுள்ளோம் என்றனர்.

கோமா நிலையில் உள்ள மன்ராஜ் விந்தர் சிங்கின் மூத்த சகோதரர் யான்விந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:

மெல்போர்னுக்கு வந்த பிறகு எனது சகோதரன் ஒருமுறைகூட இரவில் வெளியே சென்றதில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர் களோடு சேர்ந்து வெளியே செல்வ தாகக் கூறினான். நான் குழந்தை இல்லை, என்னை பார்த்துக் கொள்வேன் என்று கூறியதால் இரவில் வெளியே செல்ல அனுமதி வழங்கினேன்.

ஆனால் சமூகவிரோதிகள் அவனை கடுமையாகத் தாக்கியுள்ள னர். அவனிடமிருந்து செல்போன், பணத்தை பறித்துக் கொண்டு சென்றி ருந்தால் பரவாயில்லை. இவ்வளவு கொடூரமாகத் தாக்கியிருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

எனது தாயார் மிகவும் பலவீன மானவர். அவரிடம் இந்தச் சம்பவத்தை இதுவரை நான் கூற வில்லை. தாக்குதல் நடத்தியவர் களை தப்பவிடக்கூடாது, என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண் டும் என்று கண்ணீர்மல்க கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x